Friday, September 21, 2012

விமரிசனம் ’சாட்டை’ பட இயக்குனருக்கு அணியலாம் ஒரு சால்வை


டுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்படத்தையும், ‘சாட்டையையும் கடந்த செவ்வாயன்றே போட்டுவிட்டார்கள். உடனே சுடச்சுட விமர்சனம் எழுதினால், சம்பந்தப்பட்டவர்கள் சங்கடப்படுவார்கள் என்பதால் மூன்று நாட்கள் தள்ளிப்போட்டேன். அதிலும் ஒரு நன்மை.கொ..காணோம்படம் இந்த வெள்ளியன்று ரிலீஸாகக் காணோம்.

படத்தை உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகாவுடன் பார்த்து, நன்கு ரசித்து சிரித்ததாகவும், எனவே அப்படத்துக்கு நிதி உதவி அளித்து தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலமாக ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், நம்பக்கூடாத வட்டாரங்களிலிருந்து தகவல்.

நாங்கள் பிரஸ் ஷோவில் பார்த்தபோது, இரண்டு மணிநேரம் ஐம்பத்தியேழு நிமிடங்கள் ஓடிய.கொ..காஇன்னும் ஒரு மாதம் கழித்து ரிலீஸ் ஆக்க்கூடும். அப்போது படம் ட்ரிம் பண்ணப்பட்டு இரண்டே கால் மணிநேரமாக ஓடும் என்று நம்புகிறேன்.

ன்றைய தினத்தில் நடுத்தர வகுப்பு மக்களின் சத்ரு தனியார் பள்ளிகள்.  மூன்று ரூபாய் மதிப்புள்ள மேக்சி சைஸ் போட்டோவுக்கு நூறு ரூபாய் கேட்டால் கூட, காரணம் கேட்காமல் கொடுத்தனுப்ப வேண்டிய அவல நிலை.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்கவைப்பது கவுரவக்குறைச்சல் என்ற பொதுவான மனநிலை ஒன்று தோன்றிவிட்ட நிலையில், தனி ஒரு ஆசிரியன் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற சத்தான கருத்துடன்சாட்டையை கையிலெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அன்பழகன்.

தமிழ்சினிமா, சமீபகாலமாக கண்டு வரும் மாற்றங்களில் முக்கியமானது, சில இயக்குனர்களே தயாரிப்பாளர்களாகவும் மாறியிருப்பது. தயாரிப்பாளர்களை விட, நல்ல இயக்குனரை, நல்ல கதையை கண்டெடுப்பது இயக்குனர்களுக்கு சுலபமானது என்பதால், இந்த இயக்குன தயாரிப்பாளர்கள் மூலம் விரைவில் தமிழ்சினிமாவில் சில நல்ல இயக்குனர்கள் அறிமுகமாவார்கள் என்று நம்புவோமாக நமஹ.

ஒரு சிறிய கிராமத்தின் அரசுப்பள்ளிக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு வருகிறார் சின்சியர் ஆசியரான சமுத்திரக்கனி. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜூனியர் பாலையா நல்லவர் என்றாலும் அவரைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு, மாணவர்களின் பெற்றோர்களுக்கே வட்டிக்கு விடுவது, சில அள்ளக்கை ஆசிரியர்களை வைத்துக்கொண்டு பள்ளியை பாழாக்குவது என்று அட்டகாசம் செய்து வருகிறார் உதவி தலைமை ஆசிரியரான தம்பி ராமையா.

ஏணியை கூரையை நோக்கிப்போடாதே. வானத்தை நோக்கிப்போடு’. ‘ மாணவர்கள் பெற்றோரை நம்புறாங்க. ஆனா பெற்றோர்கள்தான் மாணவர்களை நம்புறதில்லை.’ போன்ற கொஞ்சம் பணிவான பஞ்ச் டயலாக்குகளோடு சமுத்திரக்கனி மாணவர்களை தன் வழிக்குக் கொண்டுவர முயல, அதைப்பொறுக்க மாட்டாத தம்பி ராமையா, வெம்பி வில்லனாக மாறி சமுத்திரக்கனியை தீர்த்துக்கட்ட முயல்வதும் என்று போகிறதுசாட்டை
ஒரு அரசுப்பள்ளியை திருத்துவதை மட்டுமே மொத்தக்கதையாக எடுத்தால் ஒரு டாகுமெண்டரி ஃபீல் வந்துவிடுமோ என பயந்தோ என்னவோ, அவ்வப்போது ஒரு மாணவனுக்கும் ஒரு மாணவிக்கும் நடுவில் காதல்,மோதல், கடைசியில் இருவரும் பிரிந்து போதல் என்று கிளைக்கதை ஒன்றும் வைத்திருக்கிறார்கள்.

பேசாமல் கோடம்பாக்கத்திலிருந்து உடனே பேக்-அப் பண்ணி, ஏதாவது ஒரு அரசுப்பள்ளிக்கு ஆசிரியர் வேலைக்கு அனுப்பி விடலாமா என்று நினைக்க தூண்டுகிற அளவுக்கு, அப்படிப்பொருந்திப் போகிறார் சமுத்திரக்கனி

ஆரம்ப காட்சிகளில் சற்றே எரிச்சலை ஏற்படுத்தினாலும், இப்படிப்பட்ட ஒரு குணச்சித்திர நடிகரை தமிழ்சினிமா கண்டு எவ்வளவு வருடங்களாகிவிட்டது என்று எண்ண வைத்துவிடுகிறார் தம்பி ராமையா.இனி நீங்க தம்பி இல்லை, குணச்சித்திர நடிகர்களுக்கெல்லாம் அண்ணன் ராமையா.

டி.இமானின் இசை, பாராட்டும்படியோ, வசை பாடும்படியோ இல்லாத மீடியமான இம்சை.

ஜீவன்உள்ள ஒளிப்பதிவு.

சமுத்திரக்கனியை கதாநாயகியின் உறவினர்கள் தவறாகப் புரிந்துகொண்டு அடித்து உதைத்து, அது போலீஸ் ஷ்டேசன் வரை நீளுவது படு செயற்கையான, வலிந்து திணிக்கப்பட்ட காட்சி.

அதே போல், அரசுப்பள்ளிகளின் முக்கிய வில்லனான தனியார் பள்ளிகள் குறித்து எந்த விமர்சனமும் வைக்காமல், ஒரே ஒரு காட்சியில் மட்டும் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டிருப்பது, இந்தப்படத்தின் உண்மையான நோக்கத்தை பெருமளவு சந்தேகம் கொள்ளவைக்கிறது.

ரெண்டு மணிநேர ஓட்டத்துக்கான கதை இல்லை, படத்தில் சொல்லப்பட்ட காதலும் பார்த்துப் புளித்தது, வரப்போகும் அவ்வளவு காட்சிகளும் சுலபமாய் யூகிக்க முடிந்தவை என்றுசாட்டையில் சில ஓட்டைகள் இருந்தாலும், இப்படி ஒரு சப்ஜெக்டை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குனர் அன்பழகனையும், தயாரிப்பாளர் பிரபு சாலமனை சால்வை போர்த்தி கவுரவிக்கலாம்.




3 comments:

  1. பொன்னாடையும் சால்வையும் தான் மிச்சம்.:)

    ReplyDelete
  2. சாட்டை ரொம்ப ரொம்ப சுமார் அண்ணாத்தே. கடைசியிலே உங்களுக்கும் ‘கவர்’ கொடுத்து அமுக்கிட்டாங்களோ? :-(

    ReplyDelete
  3. நானும் ரொம்ப சுமார்னுதானே எழுதியிருக்கேன் அண்ணே. கண்ணகியை சந்தேகப்படலாம். அநியாயத்துக்கு மாதவியைப்போய் சந்தேகப்படுறீங்களே?

    ReplyDelete