Friday, June 8, 2012

விமர்சனம்-’கிருஷ்ணவேணி பஞ்சாலை’ ‘சக்தி மசாலாவுல சம்பாதிச்சி, கிருஷ்ணவேணி கிட்ட பஞ்சராயிட்டாங்க’



 


சில பெண்களைப்போலவே சில படத்தலைப்புகளும், முதல்முறை பார்க்கும்போதே, நம்மை வசீகரித்துவிடுகின்றன.

என்னப்பொறுத்தவரைகிருஷ்ணவேணி பஞ்சாலையும் கூட அப்படியொரு வசீகரமான தலைப்புதான். அதுமட்டுமின்றி சில போஸ்களில் நாயகி நந்தனாவும்,’ அத்தான் எப்ப என்னப்பாக்க வர்றீங்க? என்று அழைப்பதுபோலவே இருந்தது.

தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக casting director என்று அடிக்கடி பத்திரிகைகள் மூலமாக சிலாகித்தார்கள்.

[இந்த ‘முதல் முறையாக’ என்பதை ‘முதல் முறையாக’ ஆரம்பித்து வைத்தவரை சந்தித்து ‘ஏங்க இப்பிடியெல்லாம் பண்ணுனீங்க’ என்று கேக்கவேண்டும்போல் ஏக்கமாக இருக்கிறது.]

கதை 1957-ல் கருப்பு வெள்ளையில் துவங்குகிறது. தனக்கு துரோகம் செய்த உறவினன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்கிறார் கிருஷ்ணவேணி பஞ்சாலையின் முதலாளி.

இதைத்தொடர்ந்து வெள்நாட்டிலிருந்து திரும்பும் அவரது மகன் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள, பஞ்சாலை சிறப்பாகவே நடக்கிறது. 25 சதவிகிதம் போனஸ் கேட்டபோது 45 சதவிகிதம் தந்த அவரது நல்ல மனசை நெருக்கடியான ஒரு நேரத்தில் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறபோது ஸ்ட்ரைக் வருகிறது.

அந்த ஸ்ட்ரைக் வருடக்கணக்கில் நீடிக்க  பஞ்சாலைத்தொழிலாளர்கள் பஞ்சத்தொழிலாளர்களாக மாறி நிற்க, யாரும் எதிர்பாராத ஒரு நாளில், அவர்கள் அனைவரையும் அழைத்து செட்டில்மெண்ட் தருகிறார் முதலாளி.

என்னங்க கதை டாகுமெண்டரி மாதிரி போகுதே?

 இப்படி ஒர் கேள்வி வந்துவிடக்கூடாதே என்பதற்காக, அந்த பஞ்சாலையில் நாயகனும் நாயகியும், மில் வேலை எதுவும் பார்க்காமல், எப்பப்பாத்தாலும் காதலித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 மில்லின் சூப்பர்வைசரும், படத்தின் கேஸ்டிங் டைரக்டருமான சண்முகராஜா, ஒரு நாலணா சாக்லேட்டை கையில் வைத்துக்கொண்டு, மில்லில் வேலை செய்கிற அத்தனை பொண்ணுகளிடமும் ஜொள்ளு விடுகிறார். பாலாசிங் மைனராக வந்து மஜா பண்ணுகிறார். எம்.எஸ்.பாஸ்கர் பைல்ஸ் கம்ப்ளெய்ண்டில் காமடி கதகளி ஆடுகிறார். தென்னவன் சாதி வெறியோடு அலைகிறார். அவரது அக்கா ரேணுகாவோ, நாயகியின் அக்கா வேறு சாதிப்பையனை கண்ணாலம் கட்டிக்கிட்ட ஒரே காரணத்துக்காக, நல்ல மசாலா மணக்க குழம்பு வைத்து, அதில் விஷம் கலந்து கொல்லுகிறார்.

படத்தை தயாரிச்சதே சக்தி மசாலா நிறுவனம்ங்கிறப்ப, கதையில இவ்வளவு மசாலா இருக்கிறப்ப,இப்ப நீங்க கேக்க முடியுமா என்னங்க படம் டாகுமெண்டரி மாதிரி இருக்கேன்னு?

ஆனால் இவ்வளவு இருந்தும், படம் முழுக்க டாகுமெண்டரி வாசனை இருந்ததை, பழக்க தோஷத்தினாலோ என்னவோ இயக்குனரால் தவிர்க்க முடியவில்லை.

ஹீரோ ஹேமச்சந்திரன், ஹீரோயின் நந்திதா இருவருமே நடிப்பு கிலோ என்ன விலை என்று கேட்கிறார்கள்.

படத்தில் தென்னவன், எம்.எஸ்.பாஸ்கர், ரேணுகா, பாலாசிங், சண்முகராஜா என்று ஏகப்பட்ட குணச்சித்திர நடிகர்கள் இருக்கிறார்கள். பஞ்சாலையில் நுழைந்த்தால் ஏற்பட்ட டஸ்ட் அலர்ஜியாலோ என்னவோ எல்லோருமே சற்று நட்டு கழண்டவர்கள், அதாவதுகுணாசித்திரத்தில் கமல் போலவே வருகிறார்கள்.

ரெண்டு பேரும் லெஃப்ட் ரைட் திரும்பி ஒழுங்கா வேலையப்பாத்திருந்தா..?



படத்தின் துவக்கத்தில் 1957, 67, 77 என்று வருடங்களைப் போட்டுவந்த இயக்குனர் திடீரென்று மெயின் கதை வரும்போது, அது எப்போது நடக்கிறது என்பதை சொல்லத்தவறி விட்டார்.

சம்பளமும், போனஸும் தரமுடியாமல் போன நிலையிலும் முதலாளியிடம் விசுவாசமாக இருந்த ஒரு சில ஊழியர்களைப்போல், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பார்கவும், இசையமைப்பாளர் ரகு நந்தனும் ஓரளவுக்கு உழைத்திருக்கிறார்கள்

படம் முடியும் தறுவாயில், பஞ்சாலையில் வேலை செய்த மாரியம்மா என்ற பெண்ணைக்காணோமே என்று யாரோ தேட,’ ’’அவ கதை உனக்குத்தெரியாதா’’ என்று வேறு யாரோ பதில் சொல்ல, டைரக்டர் ஒரு விஷுவல் காட்டுகிறார்.

உருக்குலைந்துபோன பஞ்சாலையின் வாசலில், காற்றின் திசைகள் தேடி கூந்தல் அலைய, கிழிந்த உடைகளுடன், மனநிலை முற்றிய நிலையில் அந்த மாரியம்மா,’’ நான் லேட்டா வந்ததால என்னை மில்லுக்கு வெளிய நிறுத்திட்டாங்க. நான் லேட்டா வந்ததால என்னை மில்லுக்கு வெளிய நிறுத்திட்டாங்க’’ என்று தொடர்ந்து அரற்றிக்கொண்டிருக்க படம் முடிகிறது.

எப்படியெல்லாமோ தியேட்டருக்குள் வந்த நாமோ,பஞ்சாலையில் நடந்த குழப்ப கூத்துக்களால் பஞ்சராகி, மாரியம்மாக்களாக, மாரியப்பன்களாக வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.

பின் குறிப்பு : அண்ணே கொஞ்ச நாளா செய்திகளுக்கு கீழே பின் குறிப்பு எழுதுறதையே  நிறுத்தீட்டிங்களே என்று நண்பர் ஒருவர் கொம்பு சீவி விட்டார்.

 இதோ, இங்கே காணக்கிடைக்கிறதே, இந்த டாப்ஸியின் ஸ்டில் கூகுளில் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்துக்கான ஸ்டில்லைத் தேடும்போது குறுக்கே வந்தது. டாப்ஸியின் கண்ணை [மட்டும் ] கொஞ்ச நேரம் உற்றுநோக்கியபடி, கிருஷ்ணவேணிக்கும், டாப்ஸிக்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்த்தில் ஒன்றும் பிடிபடவில்லை.

அடுத்த சந்தேகம் நாமெல்லாம் பெல்ட் மாட்டியபிறகும் கூட, உடுக்கை இழந்தவன் கைபோல அவ்வப்போது பேண்டைத்தொட்டுப்பார்த்துக்கொள்கிறோம். ஆனால் டாப்ஸி எப்படி இப்படி ?

ரெண்டு சந்தேகங்களுக்கும் உங்களிடம் பதில் இருந்தால் மறக்காமல் எனக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்கள்.

அப்படி சரியான பதிலை சொல்பவர்களிடத்தில், ஒரு மணிநேரம் அடிமையாக இருக்க சம்மதிக்கிறேன்.

9 comments:

  1. //எப்படியெல்லாமோ தியேட்டருக்குள் வந்த நாமோ,பஞ்சாலையில் நடந்த குழப்ப கூத்துக்களால் பஞ்சராகி, மாரியம்மாக்களாக, மாரியப்பன்களாக வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.
    //

    அப்பா பஞ்சாலை காத்துல பறந்துட்டுனு சொல்றிங்க

    ReplyDelete
  2. அண்ணே . .

    பொதுவா பஞ்சாலைகளில் சங்கு ஊதுவதுண்டு . .

    ஆனா . . .

    நீங்க . . அட்ராசக்க எல்லாம் சேர்ந்து


    பஞ்சாலைக்கே சங்கை . . ஊதிட்டின்களே அண்ணே . .

    ReplyDelete
    Replies
    1. நாங்க ஊதலண்ணே டைரக்டரே ஊதிட்டாரு....

      Delete
  3. ஒஹோ சாரே,

    பஞ்சாலை பஞ்சத்தில அடிப்பட்டு போச்சு போல :-))

    துலாபாரம் கதைக்கு புது முலாம் பூசி எடுத்துட்டு என்னா ஒரு பில்ட் அப்பு :-))

    ஹீரோ,ஹீரோயினுக்கு நடிக்க வரலைனு சொல்லுறிங்க, நடிக்க பயிற்சி, மேலும் ஒத்திகைலாம் பார்த்துட்டு ,தான் படமே எடுக்க போனோம்னு இயக்குநர் ஓவரா சீன் போட்டாரே ஏன்? இதுக்கே ரீ ஷீட் எல்லாம் செய்து மெருகேற்றினதா செய்தி படிச்சேன்.

    ---

    ஹி..ஹி உங்களை ஒரு மணி நேரம் அடிமையாக வச்சு என்ன செய்யுறதாம்?

    சரி என்னோட பொது அறிவைக்காட்டிக்கவாவது உங்க கேள்விக்கு பதிலை சொல்ல முயற்சிக்கிறேன்.(ஏற்கனவே சிலர் என்னை அப்பாடாக்கர்னு பாராட்டிடாங்க அதை மெய்ப்பிக்க வேண்டாமா)

    #டாப்சி பஞ்சாபி பொண்ணு நீங்க பஞ்சாலைனு டைப்பினத கூகிள் பஞ்சாபுக்கும் போறிங்க போலனு வழி காட்டியிருக்கும்.

    அனேகமா "கிருஷ்ணவேணி பஞ்சாலை ஹீரோயின் இமேஜ்/பிக்சர்னு" தேடி இருப்பிங்க, பஞ்சாபி ஹீரோயினை கூகிள் காட்டிருச்சி.

    #ஃபீல்டில இருக்க உங்களுக்கே உடுப்பு உடுக்கை இடையில எப்படி நிக்குதுனு தெரியலையா?

    ஒரு டைட் ஷார்ட்ஸ் போட்டு அதோட மேல் வரும் ஆடையை இணைச்சு இருப்பாங்க, மேலும் அட்கெசிவ் போட்டு உடையையும் ஒட்டிருவாங்க.ஹாலிவுட் படத்தில எல்லாம் இந்த டெக்னிக் தான் பயன்ப்படுத்துறாங்கனு படிச்சேன் அதை வச்சு சொன்னேன்.

    மேலாடை, கீழாடைனு எல்லாத்திலயும் பசையை விளிம்பில் தடவி ஒட்டிருவாங்க,அதனால தான் ஆடை நழுவாமல் நிக்குது. நடிக்க வந்தால் என்னலாம் செய்ய வேண்டி இருக்கு :-))

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு வவ்வால். நீங்கள்லாம் நல்லா வருவீங்க

      Delete
  4. முத்தண்ணே இப்டி எல்லாப் படத்தையும் ( ஒரு சிலது தவிர) கழுவி ஊத்திட்டுத் திரிஞ்சா முதல் போட்டு பிறகு முக்காடு போட்டுகிட்டவக வட்டிக்கு வாங்கியாவுது ஆட்டோ அனுப்ப மாட்டாகளா?

    ReplyDelete
    Replies
    1. பேசாம ஆட்டோ கன்வேயன்ஸ கையில குடுத்துருங்க, நேர்ல வந்தே ’வாங்கிக்கிறேன்னு சொல்லிர மாட்டமா? அண்ணே நாங்களும் மதுரைக்காரய்ங்கதாண்ணே

      Delete
  5. அவங்க பெயரே டாப்ஸி என்று இருப்பதால் இடுப்புக்கு கீழே இருக்கும் மேட்டரை பற்றிய உங்கள் கேள்வியே பிழையாக இருக்கிறது என்று நிராகரிக்கப்படுகிறது

    ReplyDelete
  6. //பஞ்சாலையில் நுழைந்த்தால் ஏற்பட்ட டஸ்ட் அலர்ஜியாலோ என்னவோ எல்லோருமே சற்று நட்டு கழண்டவர்கள், //

    :-)

    ReplyDelete