Saturday, January 28, 2012

சூப்பர் ஸ்டாரை இப்படியா ஏமாத்துவீங்க எஸ்.ராமகிருஷ்ணன்?


ரஜினியை தன்னுடைய விழாக்களுக்கு அழைப்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் நிறைவான அன்பும் நேர்மையான உறவும் கொண்டவர்கள். இன்னொரு வகையினர் மனமெல்லாம் தந்திரம், நெஞ்செல்லாம் வஞ்சகம் கொண்டவர்கள்.இந்த இரு சாராரையும் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் அறிவார். அதனால் தான் தேர்தல் தினத்தன்று பொன்னர் சங்கர் படம் பார்க்க கலைஞர் ரஜினியை அழைத்த போது,  தேர்தல் நேரம் முடிந்த பின் சென்றார். சில சமயங்களில் ரஜினி அந்தப் பொறியை கவனிக்காமல் விட்டுவிடுவார். அந்த சமயங்களில்தான் பகடைக்காயாகவோ அல்லது பலியாடாகவோ ஆக்கப் படுவார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் அப்படி பகடைக்காயக்கப்படும் நிகழ்ச்சி வரும் 2.2.2012 அன்று நடைபெறுகிறது. இடம் காமராஜர் அரங்கம், விழா  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இயல் சர்வதேச விருது பெறும் விழா.
ரஜினியை வைத்து சதி வலையைப் பின்னியிருப்பவர்கள் எஸ். ராமகிருஷ்ணனும் , மனுஷ்யபுத்திரனும் 
ஒரு எழுத்தாளர் சர்வதேச விருது பெரும் விழா எப்படி ரஜினி பகடைக்காயாகப் பயன்படுத்தப் படும் விழாவாகும் என்று எல்லோருக்கும் தோன்றலாம்.
இதைப் புரிந்து கொள்ள சமீபத்தில் சாகித்திய அகடாமி விருது பெற்ற காவல் கோட்டம் சு. வெங்கடேசன் மற்றும் எஸ். ராமகிருஷ்ணனின்  நீண்ட பகை வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.
மதுரைக்கு அருகில் உள்ள  திருப்பரங்குன்றம் தான் வெங்கடேசனின் ஊர். அவர் தீவிரமான படிப்பாளி. இளம் வயதிலேயே இடது சாரி இயக்கத்தில் தன்னை முழு நேர ஊழியராக ஐக்கியப் படுத்திக் கொண்டவர். தமிழ் நாடு முழுவதும் இருந்து வருகிற இலக்கியவாதிகளை உபசரித்து மகிழ்வதில் முதன்மையானவர். ராமகிருஷ்ணனுக்கும் அவர் செய்த உபசரிப்பு கொஞ்சநஞ்சமல்ல. ராமகிருஷ்ணன் தன்னுடைய தொண்டரடிப் பொடிகளுள் முதன்மையானவர் என்று வெங்கடேசனை கருதி வந்த காலம் அது.
இந்த சமயத்தில்தான் வெங்கடேசன் ஒரு நாள்,  மதுரை வரலாற்றை மையமாகக் கொண்டு நான் ஒரு நாவல் எழுத இருக்கிறேன் என்று தன்னுடைய விருப்பத்தை ராமகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறார். தன்னுடைய தொண்டரடிப்பொடியின் இந்த விருப்பத்தை ராமகிருஷ்ணனால் ரசிக்க முடியவில்லை. ( ஆடுகளம் படத்தின் பேட்டைக்காரன் மன நிலையை நினைவில் கொள்ளுங்கள் ) வேறு வேலை இருந்தால் பாருங்கள் வெங்கடேஷன் என்று சொல்லி விட்டு வந்து விட்டார்.
ஆனால் வெங்கடேசன் வேறு வேலையைப் பார்க்க வில்லை. மதுரை குறித்த நீண்ட ஆய்வில் இறங்கினார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. பனிரெண்டு ஆண்டுகள்.
மதுரையைப் பற்றி எழுத வேண்டும் என்பது ராமகிருஷ்ணனின் கனவு. அதை இன்னொருவர் எடுத்துக் கொண்டால் எப்படி ராமகிருஷ்ணனால் சகித்துக் கொள்ள முடியும். அவர் ஏற்கனவே கண்ணகி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க அதை ஜெயமோகன் எழுதி விட்டார். மதுரையை வெங்கடேசன் எழுதி விட்டால். அதுவும் தனக்குத் தொண்டரடிப்பொடியாக இருந்த நபர் அப்படி முடிவு எடுத்து விட்டால் ..ராமகிருஷ்ணன் வெங்கடேசனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.
அவனை வேறு வேலையைப் பார்க்கச் சொல்லுங்கள். நாவலென்ன கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டி போர்டு என்று  நினைத்தானா ஈசியாக தூக்கிச் செல்ல. ஒரு ஈ பீரங்கியை இழுக்க ஆசைப்படுகிறது ..என்றெல்லாம் பல வகைகளில் அலட்சியமாகப் பேசி வந்தார் ராமகிருஷ்ணன். ஆனாலும் வெங்கடேசன் மனம் தளராமல் தொடர்ந்து எழுதி வந்தார். பனிரெண்டு கால ஆய்வு மூன்றாண்டு கால தொடர் எழுத்து இதன் பலனாக ஆயிரம் பக்க நாவலாக காவல் கோட்டம் உருவானது.
வெங்கடேசன் பதிப்பகம் தேடி அலைந்த போது, எந்த பதிப்பகங்களை யெல்லாம் வெங்கடேசன் தொடர்பு கொள்கிறாரோ அந்த பதிப்பகங்களுக் கெல்லாம் ராமகிருஷ்ணன் தொடர்பு கொண்டு அது ஒரு நாவலே அல்ல, அதை வெளியிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பலத்த  நஷ்டம் தான் வரும் என்று எச்சரித்து வந்தார். வெங்கடேசனை அந்த ஆயிரம் பக்கங்களையும் கூவத்தில் கொண்டு வந்து போடச் சொல்லுங்கள். கூவத்தில் தான் அவ்வளவு காகிதங்களை கரைக்கிற அமிலம் நிறைந்திருக்கிறது என்றெல்லாம் நண்பர்களிடம் அலட்சியமாகப் பேசி வந்திருக்கிறார் எஸ்.ரா.
ஒரு வழியாக வெங்கடேசன் தமிழினி பதிப்பகம் மூலம் காவல் கோட்டம் நாவலை வெளிக்கொண்டு வந்தார். ராமகிருஷ்ணனுக்கு ஆத்திரம் தாள வில்லை. அந்த நாவலை காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் என்று தன்னுடைய வலைப் பக்கத்தில் எழுதினார்.சாலையோராம் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்பவனைப் பார்த்திருக்கிறீர்களா. சுளீர் சுளீர் என சாட்டை உடலில் பட்டாலும் விடாமல் அடித்துக் கொள்வானே, அப்படியொரு தண்டனை போல் இருந்தது இந்த நாவலை வாசித்தது என்று எழுதினார். நாவல் ரோடு ரோலர் மாதிரி இருக்கிறது என்று பரிகசித்தார். நூற்றாண்டுகளாக ஒரே புத்தகத்தைப் படித்தால் ஒருவன் எவ்வளவு சலிப்பு அடைவானோ அவ்வளவு சலிப்பு அடைந்தேன் இந்த புத்தகத்தை வாசித்து  விட்டு என்று எழுதினார். நீங்கள் யாரையாவது தண்டிக்க விரும்பினால் இந்த நாவலை வாங்கி பரிசளியுங்கள் என்று எழுதினார். அந்த நாவலை முதலில் வெளியிட சம்மதித்து விட்டு வெளியீட்டு விழா தினத்தன்று காய்ச்சல் என்று பொய் சொல்லி வீட்டில் படுத்துக் கொண்டார்.
 ஒரு புத்தகத்திற்குப் பின்னால் ஒரு எழுத்தாளன், ஒரு பதிப்பகம், ஒரு மொழி, ஒரு வரலாறு இவைகளெல்லாம் இருக்கின்றன என்ற ஒரு சின்ன பிரக்ஞை கூட இல்லாமல் அந்தப் புத்தகத்தை யாரும் வாங்கி விடக்கூடாது என்ற வெறியோடு எழுதினார்.
ராஜபக்ஷே அவ்வளவு தமிழர்களை கொன்று குவித்த போது கூட  பொங்கி எழுதாத ராமகிருஷ்ணன், பாவம் ஒரு முதல் புத்தகம் எழுதிய இளம் எழுத்தாளனுக்கு எதிராக பொங்கிப் பொங்கி எழுதினார். எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ணனின் பாசாங்கற்ற நிஜ கோர முகம் வெளிப்பட்டது அன்றைய தினத்தில் தான்.
அந்தப் புத்தகத்தை இனி ஒரு நபர் கூட வாங்கி வாசிக்க மாட்டார் என்ற சூழலே அன்று ஏற்பட்டது. ஆனால் தெய்வம் அனுப்பியது போல் ஜெயமோகன் களத்தில் குதித்தார். இது போன்ற அறச்சீற்றம் தான் ஜெயமோகனின் பலம்.
உண்மையில் வெங்கடேசன் - ராமகிருஷ்ணன் பகைக் கதை  ஒரு சினிமாக்கதை போல, ஒரு நீதிக்கதை போல, ஒரு சாமிக்கதை போலத்தான் தெரிகிறது. கெடுவான் கேடு நினைப்பான் என்ற நீதியும் பொறுத்தவன் பூமி ஆள்வான் என்ற நீதியும் இணைந்து நிற்கிற கதை அது.
ஜெயமோகன், ‘காவல் கோட்டம், ஒரு நாவல் மட்டுமல்ல தமிழின் மிக முக்கியமான நாவல் என்று ஒரு தொடர் எழுதத் துவங்க காவல் கோட்டத்திற்கு ஒரு பெரிய வாசகர் கூட்டம் உண்டானது. ஜெயமோகனை எதிர்த்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ராமகிருஷ்ணன் தற்காலிகமாகப் பின் வாங்கிக் கொண்டார். ஆனால் போகும் இடமெல்லாம் நாவலையும் வெங்கடேசனையும் புறம் பேசுவதையே தினசரி வழக்கமாக கொண்டார். இதையெல்லாம் ஒரு மௌனமான புன்னகையுடன் மட்டுமே எதிர்கொண்டார் வெங்கடேசன். 
இப்பொழுது ராமகிருஷ்ணன் தலையில் மேலும் ஒரு இடி விழுந்தது.இயக்குனர் வசந்த பாலன் காவல் கோட்டத்தை மையமாகக் கொண்டு அரவான் திரைப்படம் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். அதுவரை சினிமா, தான் குத்தகைக்கு எடுத்த இடம், அங்கே வெங்கடேசன் வரவே முடியாது என்ற நினைத்திருந்த ராமகிருஷ்ணனின் அகந்தைக்கு மற்றுமொரு அடி விழுந்தது.                வசந்த பாலனின் சினிமா படப்பிடிப்பில் நடைபெறுகிற சின்ன சின்ன சறுக்கல்களையும் குழப்பங்களையும் பின்னடைவுகளையும் அது குறித்த தகவல்களையும் சேகரித்து அது குறித்து நண்பர்களிடம் பேசி சிரித்து மனம் தேற்றி வந்தார்.  
லயன் கிங் படத்தில் ஒரு கெட்ட சிங்கம் வரும். அதன் சிரிப்பு வினோதமாக இருக்கும். இது மாதிரி தருணங்களில் ராமகிருஷ்ணன் சிரித்ததும் அப்படித்தான் இருந்தது.
இப்பொழுதுதான் இடிக்கெல்லாம் தலையாய இடியாக ஒரு பேரிடி வந்து ராமகிருஷ்ணன் தலையில் விழுந்தது. சு.வெங்கடேசனுக்கு காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்திய அகடாமி விருது அறிவிக்கப் பட்டது.
உண்மையில் தெய்வம் இருக்கிறது என்ற மீண்டும் உலகில் மீண்டும் நிரூபனமான தினம் அது.
என் கலைக்கிந்த தமிழ் நாடு இணையாகுமா என்று ஹேமநாத பாகவதர் ஆணவத்துடன் பாடினால் கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ? என்று சிவன் பாடி  ஆணவத்தை அடக்குவதுதானே வழக்கம்.
ஒரு எழுத்தை, கலைப் படைப்பை, ஆயிரம் பக்க அபத்தம் என்று எழுதிய எஸ். ராமகிருஷ்ணனை சிவனே வந்து தண்டித்த நிகழ்வு தான் வெங்கடேசனுக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்த நாள்.
  * * * * *
சாகித்திய அகடாமி அறிவிப்பு வந்த நாளிலிருந்து ராமகிருஷ்ணன் மிகுந்த மனப்பதட்டத்துடன் இருந்ததாக அவருடைய நண்பர்கள் சொன்னார்கள்.
பலரும் இருக்கிற சமயத்திலேயே தன்னையும் அறியாமல் விருதென்ன பெரிய மயிரா? என்று சத்தமாக அவர் பேசியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
சில நாள் தூக்கத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் அலறி எழுந்திருத்திருக்கிறார். அது ஒரு குழப்பமான சத்தம்தான் என்றாலும் டேய் வெங்கடேசா என்கிற மாதிரி அந்த சத்தம் இருந்ததாக  அவர் வீட்டிலிருந்து தகவல்கள் வந்தன. 
* * * * *
இந்த வருட புத்தகத் திருவிழா ராமகிருஷ்ணனுக்கு மிகவும் அவமானகரமான விழாவாக இருந்திருக்கிறது.
எங்கு பார்த்தாலும் வெங்கடேசனுக்கு கட் அவுட். வெங்கடேசனும் புத்தகத் திருவிழா நடந்த அனைத்து நாட்களும் அங்கே வந்து ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து விட்டார். இது வரை புத்தகத் திருவிழாவில் சிங்கம் போல பவனி வந்த ராமகிருஷ்ணன் இம்முறை வாலறுந்த நரி போல நேரே உயிர்மை ஸ்டாலுக்குச் செல்வது அப்படியே வெளியே வந்து விடுவது என்பதாகவே இருந்திருக்கிறார்.
புத்தகத்திருவிழாவில் யாரைப்பார்த்தாலும் காவல் கோட்டம் நாவல் வாங்கி கையில் வைத்தபடியே நடந்திருக்கிறார்கள். இதில் சிலர் ராமகிருஷ்ணனிடம் காவல் கோட்டம் புத்தகத்தை நீட்டி ஆட்டோகிராஃப் கேட்டிருக்கிறார்கள். பிரிண்ட அடித்த ஐயாயிரம்  புத்தகங்களும் விற்றுத் தீர்ந்ததில் தமிழினி வசந்தகுமார் மிகவும் பெருமிதத்துடன் நடமாடியிருக்கிறார். இது போட்டி புத்தக வியாபாரி மனுஷ்யபுத்திரனுக்கு மிகவும் அவமானமாக இருந்திருக்கிறது.
இருவரும் அடிபட்ட நரியாய் காயத்தை நக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போது தான் கனடாவில் இருந்து இயல் விருதுக்கு எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
இந்த சிறு நெருப்புப் பொறியை வைத்துத்தான் நம் ஈகோவை நாம் தூக்கி நிறுத்திக் கொள்ள முடியும் என்று ராமகிருஷ்ணன் போட்ட கணக்குத் தான் சூப்பர் ஸ்டாரை வைத்து இதற்கு ஒரு விழா எடுப்பது என்கிற முடிவு.
 * * * *
கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு போவதற்கு முன்பாக இந்த இயல் விருது பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம் நண்பர்களே!
இந்த இயல் விருது என்பது தமிழில் வழங்கப் படுகிற விருதுகளிலேயே சப்பையான விருது.
இந்த விருதை இதுவரை யார்யார் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தால்தான் இந்த விருது எவ்வளவு சப்பையான விருது என்று ஒருவருக்குப் புரியும்
கே. கணேஷ் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். இ.பத்மநாப ஐயர் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். ஏ. சி. தாசியேஸ் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். லஷ்மி ஹோம்ஸ்லோம் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். ஐராவதம் மகாதேவன் வாங்கியிருக்கிறார். இந்த வரிசையில் இப்பொழுது எஸ். ராமகிருஷ்ணனும் வாங்குகிறார்.
இந்த விருது வாங்கிய யாரும் இதைப் போல் ஒரு விழா எடுக்கவில்லை. வெளியில் கூட சொன்னதில்லை. ஏதோ கனவு கண்டால் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்று ஒரு பழமொழி இருக்கிறதே. அந்தளவிற்குத்தான் இந்த விருதை கடந்த காலங்களில் எல்லோரும் பாவித்து வந்தார்கள். .[இந்த விருதுக்குப் பதில் ஒரு எருது கிடைத்திருந்தால் கூட ஏரோட்டிப் பிழைத்திருக்க முடியும்.]
இது சாதாரண விருது என்றால் ரஜினியை விழாவுக்கு கூட்டி வர முடியாதே.
அந்தக் கணத்தில், கேடி பில்லா ராமகிருஷ்ணன் மனதிலும், கில்லாடி ரங்கா மனுஷ்யபுத்திரன் மனதிலும் உதித்த சதிதான் இதை சர்வதேச இலக்கிய விருது என்று சூப்பர் ஸ்டாரிடம் பொய் சொல்லலாம் என்பது. 


கனடாவில் கொடுக்கப்படுகிறது என்பதனால் அது சர்வதேச விருதாகி விடுமா என்ன? கனடாவின் பிரதமர் சர்வதேசப் பிரதமரா ? கனடாவில் விற்கப் படும் பேல்பூரி சர்வதேச பேல்பூரியா? அடப்பாவிகளா?
சின்னக் குழந்தையை சாக்லெட் கொடுத்து ஏமாற்றுவது போல தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரை,  அவர் தமிழ் இலக்கியம் அறியாதவர் என்ற இடைவெளியைப் பயன்படுத்தி இப்படியா ஏமாற்றுவீர்கள்?
சூப்பர் ஸ்டாரை பலரும் அவமதித்திருக்கிறார்கள் . ஆனால் அவர் தமிழ் அறியாதவர் , தமிழ் இலக்கிய சூழல் அறியாதவர் என்பதை உடன் பழகி அறிந்து, அந்த நுட்பமான இடைவெளியைப் பயன்படுத்தி, அந்த வெள்ளந்தியான தலைவனை, வெள்ளை மன தளபதியை வேறு யாரும் ராமகிருஷ்ணனைப் போல் இனி அவமானப் படுத்தி விட முடியாது. 
*******
சூப்பர் ஸ்டார் அவர்களே!
நீங்கள் அந்த விழாவில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அது ஒரு இலக்கிய விழா, சர்வதேச இலக்கிய விருது வழங்கும் விழா என்று நம்பிப் போக வேண்டாம்.
மதுரை மண்ணில், சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய வாழ்க்கையை, இளமையை மக்களுக்கான போராட்டங்களில் கரைத்து, கால் நூற்றாண்டு காலத்தை இலக்கிய வாசிப்பில் செலவழித்து, பனிரெண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, மூன்றாண்டுகள் செலவழித்து ஒரு நாவல் எழுதி, தன்னுடைய முதல் நாவலுக்கே சாகித்திய அகடாமி விருது வாங்கி, இந்தியாவில் இளம் வயதில் சாகித்திய அகடாமி விருது பெற்ற தமிழன் என்று சாதனை படைத்த ஒரு எளியவனுக்கு எதிராக தன்னுடைய ஆணவத்தைக் காட்ட எஸ். ராமகிருஷ்ணன் நடத்தும் அகம்பாவ விழா என்பதை அறிந்து செல்லுங்கள்!
ராமகிருஷ்ணரே!
வெங்கடேசனை ஒரு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னால் தீர்ந்து போகிற வியாதி தான் உங்களுக்கு வந்திருப்பது. அதை சூப்பர் ஸ்டாரை அழைத்து வந்து விழா நடத்தி பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள்!

பெப்சி விவகாரம்; ரஜினி முதல்வரை சந்தித்த ரகசியம்

Friday, January 27, 2012

இன்னும் எத்தனை பேருக்கு மொட்டை போடலாமுன்னு யோசிச்சிட்டிருக்கேன்’- இயக்குனர் பாலா


கோடம்பாக்கமே இப்போது ஒரு கொத்து புரோட்டா கடை போல் ஆகிவிட்டது. ஆளாளுக்கு தோசைக்கரண்டியை எடுத்துக்கொண்டு பிரச்சினையைக் கொத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி ஊழியர்களுக்குமிடையிலான மோதல் போக்கு மேலும் தீவிரமடைகிறதே ஒழிய சற்றும் தணிகிற பாடாயில்லை. காரணம் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ரேஞ்சில் இஷ்டத்துக்கு ஆளாளுக்கு வார்த்தைகளை விட்டுக்கொண்டிருப்பது.

 அறிக்கை மன்னன் அமீர் பேட்டி கொடுத்த 5 வது நிமிடமே சேரன் அமீரை சிக்கலில் மாட்டிவிட்டு நக்கல் அடிக்கிறார்.பாரதிராஜாவோ இவர்கள் ரெண்டுபேரையும் சேர்த்து வைத்து சாணி அடிக்கிறார். எஸ். ஏ. சந்திரசேகரனோ, 'பெப்சி’ன்னு ஒண்ணைப்பத்தி இதுவரைக்கும் கேள்விப்பட்டது கூட கிடையாது.நாங்கல்லாம் காளிமார்க் சோடா, மாப்பிள்ளை விநாயகர் கலர் மட்டும்தான் குடிக்கிறது என்கிறார்.

இவர்கள் இப்படி கூத்தடித்துக்கொண்டிருக்க, உட்கார,எழுந்திரிக்க,உட்கார்ந்துஎந்திருக்க, எழுந்திருந்து உட்கார என்று எல்லாத்துக்கும் பேட்டா எழுதிய பெப்சி தொழிலாளர்கள்
 புதிய பேட்டாவுக்கு ஒத்துக்கொண்டு நடந்த படப்பிடிப்புகள் ஒவ்வொன்றாக கேன்சலாவதைப்பார்த்து டென்சனாகி ‘ அம்மா ’அப்பாயிண்ட்மெண்ட்  கேட்டு, இன்று எம்.ஜி.ஆரிடம் முறையிட பீச்சுக்குக் கிளம்பிவிட்டார்கள். போயஸ்கார்டன் வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி,  எம்.ஜி .ஆரிடமிருந்து தகவல்  வந்த பிறகு, பெப்சி தலைவர்களை அம்மா நாளை அழைக்கக்கூடும் என்கிறார்கள்.

பிரச்சினை இப்படி போய்க்கொண்டிருக்க, எவன் எப்பிடிப் போனா எனக்கென்ன என்று படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நிறுத்த வைப்பதற்குள், தயாரிப்பாளர் சங்கத்தினர் படாத பாடு பட்டுவிட்டார்களாம்.

இதில் கடைசிவரை  ரப்பராய் இழுத்தவர்கள் மூன்று பேர்.முதலாமவர் பாரதிராஜா.பிடிவாதமாய் தேனிக்குக் கிளம்ப இருந்தவரை சென்னையிலேயே தடுத்து நிறுத்த மேற்கண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. என்னோட கலைஞர் டி.வி சீரியல்ல வேலை பாக்குறவங்கள வச்சி’ அன்னக்கொடிய நாட்டப்போறேன் என்று வீராப்பாய் விடை பெற்று தேனிக்குக் கிளம்பிவிட்டாராம்.

 அடுத்து கே.வி ஆனந்த்,’மாற்றான்’ படத்துக்காக ஓ.எம்.ஆர்.ரோடில் சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில் செட் போட்டிருந்த அவர் இந்த ஃபைட் சீனை மட்டும் முடிச்சிக்கிறேன். இல்லேன்னா செட் வீணாப்போயிரும் என்று எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார்.அதை ஏற்றுக்கொள்ள மறுத்து நேற்றோடு ‘மாற்றான்’ ஷூட்டிங்கை ரத்து செய்தார்கள். இதனால் கே.வி.ஆநொந்து ஆகிவிட்டார்.

கடைசிகடைசியாய்,இன்றுவரை படப்பிடிப்பை பிடிவாதமாய்த் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே நபர் இயக்குனர் பாலாதான்.’என்னோடது பெரிய பட்ஜெட் படம். கஷ்டப்பட்டு பெரிய கூட்டத்தைத் திரட்டியிருக்கோம். ஷூட்டிங்க பாதியில நிறுத்தினா மறுபடி இவங்கள ஒண்ணு சேர்க்குறது கஷ்டம். இவ்வளவும் போக 200 பொம்பளைங்களுக்கு மொட்டை அடிச்சி , அவங்களுக்கு சட்டை தச்சிக்குடுத்திருக்கேன்.. அதர்வா பயலுக்கு தலையெல்லாம் பொடுகு போட்டிருக்கேன். வேதிகாவுக்கு,விலா எலும்புல ஒண்ண வெளிய எடுத்து வச்சிருக்கேன்’ என்று வரிசையாக மொட்டைச் சாக்குகளைச் சொல்லி படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறாராம் பாலா.

ஒரு பிரச்சினையை ஒட்டி, மொத்த இண்டஸ்ட்ரியுமே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, அதில் ஃபில்டர் சிகரட்டைப்பற்ற வைத்து, தயாரிப்பாளர் சங்கத்தின்  முகத்தில் ஊதுவது பாலாவுக்கு அழகல்ல. இதன் மூலம் அவர் வீணா பாழாப்போகப்பார்க்கிறார் ‘ என்று தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் எச்சரிக்கிறார்கள்.
ஒரே நாள்ல 200 பொம்பளங்களுக்கு மொட்டை அடிச்சவன் நான். படம் ரிலீஸாகிற அன்னைக்கி  புரடியூசர் போக இன்னும் எத்தனை ஆயிரம் பேருக்கு அடிக்கலாம்னு இப்பவே உக்காந்து லிஸ்ட் போட்டுக்கிட்டிருக்கேன். ஒரு படத்துக்கு 500 பேக் அப் சொல்றவன். என் கிட்டயே மேக் அப்பா? என்று வீரியமாய் பதில் விளாசுகிறாராம் பாலா.
பாலா இதற்கெல்லாம் அசருகிற ஆளா?

ராம நாராயணனின் ஏழரையாம் அறிவும் ‘போதை தர்மனும்’

சினிமாவில் மற்ற எல்லாவற்றையும் தாண்டி ‘ஐடியாவுக்கு’ தான் துட்டு என்று ஒன்று சொல்வார்கள்.இது ’அருந்ததி’ போன்ற பல சமயங்களில் முன்னாள் இயக்குனர் ராமநாராயணனுக்கு பொருந்தும். சில சமயங்களில் இதே ஐடியாவால் அவர் துட்டு அவரை விட்டுப்  போனதும் உண்டு.

நேற்று ஃபோர் ஃப்ரேம்ஸில் ‘போதிதர்மன்’ படத்துக்கான பத்திரிகையாளர் காட்சியைப்போட்டுவிட்டு, சீனாவரை போய், அவரே இயக்கி விட்டு வந்தது போல் கைகுலுக்கல்களை வாங்கிக்கொண்டிருந்தார்.

நானும் என் பங்குக்கு, பாங்காக்கில் இருக்கிற டைரக்டர் டோனி சிங்குக்கு கேட்டு விடவா போகிறது என்ற தைரியத்தில், ‘’ சார் அப்பிடியே நீங்க டைரக்ட் பண்ணுன மாதிரியே இருக்கு சார்’ என்று மன சாட்சியை, கேவலம் ஒரு போண்டா, காபிக்காக அடமானம் வைத்துவிட்டுதான் வந்தேன்.

‘ஹாலிவுட் நிறுவனமான இண்டோ ஓவர்சீஸ் ஃபிலிம்ஸ் தயாரித்த ஜெட் லீயின்’ A WHITE SNAKE REVENGE'  என்ற படத்தை தனது எட்டாவது அறிவைப் பயன்படுத்தி ‘போதி தர்மன்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்  ராமநாராயணன்.

உலகமெங்கும் தமிழனுக்கு பெருமை சேர்த்த போதிதர்மனின் சிஷ்யப்பிள்ளையாம் ஜெட்லீ. நம்ம போதி அவர்களை மானசீக குருவாக ஏற்று சீன மக்களை நோய் நொடி,மற்றும் பேய் பிடிகளிலிருந்து  எப்படி மீட்கிறார் என்பதை நம்ம ராமநாராயணன் பாணியில் பாம்பு, எலி, ஆமை போன்ற மிருகங்களின் உதவியுடன் ஆனால் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தும் சண்டைக்காட்சி, மற்றும் கிராபிக்ஸ் உத்திகளுடன் இயக்கியிருக்கிறார் டோனிராமநாராயணசிங்.

பேய்,பிசாசு,வவ்வால் பூதங்களை தன் மந்திரசக்தியால் மாயக்குகைக்குள் அடைத்து வைத்திருக்கும் ஜெட்லீயின் சிஷ்யன், மூலிகை இலைகளைப்பறிக்கப்போன இடத்தில் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வெள்ளை நாகக்கண்ணியிடம் ஒரு முத்தம் வாங்கி அவள் மேல் பித்தம் போதை பிடித்து அலைகிறான்.வெள்ளை நாகக்கண்ணியின் தங்கை பச்சை நாகக்கண்ணி இவர்கள் காதலுக்கு தூது போகிறாள். அவள் ஒரு நாகக் கன்னி அவளோடு நீ சேர்ந்து வாழ முடியாது என்று குரு சொல்வதை ஏற்காமல் அவன் சந்திக்கும் சோதனைகள்,கிராபிக்ஸ் சாதனைகள் தான் ’போதிதர்மன்’.

ஒரு முத்தம், ஒரே ஒரு முத்தம் என்னோட மொத்த வாழ்க்கையையும் மாத்திபோட்டிருச்சி பாத்தியா? ‘மேகத்திற்கும் தாகம் உண்டு,நாகத்திற்கும் காதல் உண்டு’ டப்பிங் படத்துக்கும் நல்ல கலெக்‌ஷன் உண்டு’  போன்ற வசனங்களில் ராமநாராயண டச் தெரிகிறது.

ஏவல்,பில்லி சூனியங்களில் நம்பிக்கையுள்ளவர்கள், கையில் கொறிக்க நாலு தானியங்களை வைத்துக்கொண்டு இந்தப்படத்தைப் பார்க்கலாம்.

படித்து கண் கலங்க ஒரு பின்குறிப்பு;

ரைட் சைடுல வில்லனுக்கு பஞ்ச் குடுத்திட்டிருக்காரே இவர நல்லா பாத்துக்கங்க. இவர ஏன் நாங்கபாக்கணும்னு உங்களுக்கு ஒரு கோவம் வரும். வரணும்.

ஒரு பத்து செகண்ட் பாக்கச்சொன்னதுக்கே உங்களுக்கு இம்பூட்டு கோவம் வருதே, ரெண்டே கால் மணி நேரம் ஃபைட்டு, பாட்டு, டூயட்டுன்னு இவர் பண்ணுன அட்ராசிட்டிகளைப் பாத்த எனக்கு எப்பிடி இருக்கும்?

அண்ணனோட பேரு, ஒரு எலி ரெண்டு எலி அஞ்சலி மாதிரி, ஒரு ஸ்டாரு,பவர்ஸ்டாரு,...செவன் ஸ்டாருஜீ.கே. ‘இன்னைக்கி ரிலீஸாகியிருக்க ‘தேனி மாவட்டம்’ படத்தோட ஹீரோ.

போன வாரமே இந்தப் படத்தைப் பார்த்து தாங்க முடியாம அழுதுட்டேன். மத்த எல்லாத்தையும் கூட, கர்ஷீப்பை கடிச்சி அழுது பொறுத்துக்கிட்ட எனக்கு, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைச்சா இன்னும் அழுகை பொத்துக்கிட்டு வருது.நான் அழுக, அதைப்பாத்து நீங்க அழுக, வேணாம் அபிராமி விட்டுருவோம்னுதான் நினைச்சேன். ஆனா முடியலை.

ஒரு  காட்சி, அண்ணன் செவன்ஸ்டாரு, தன்னொட காதலியைக் கலாய்க்கிறதுக்காக, அவ ஃபிரண்டுகிட்ட போய், ஒரு பொண்ணோட போட்டோவக் காட்டி,’’இந்தப்பொண்ண எனக்கு புடிச்சிருக்கு. அவளுக்கு என்னப்புடிச்சிருக்கான்னு கேட்டுச் சொன்னீன்னா, நான் அவளையே கட்டிக்கிறேன்’ என்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும், தோழி, அண்ணனைப்பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைய வேண்டிய ஒரு டயலாக் பேசுகிறார்,

’’ என்னண்ணே இப்பிடி கேட்டுட்டீங்க. இந்த பூமியில பொண்ணுன்னு பொறந்த எவளுக்காவது உன்ன புடிக்காம போகுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்.........





Wednesday, January 25, 2012

இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு! ரஜினி என் மனைவியைக் கலாய்ச்சார்


இன்று காலை சரியாக 10.10 மணிக்கு ரஜினியை, அவரது காரில் இறங்கும்போது பார்த்ததற்கு முந்தின கணம் வரை, அவரால் இன்னொரு படம் நடிக்கமுடியும் என்ற நம்பிக்கை  எனக்கு ஏற்பட்டதில்லை.காரணம் அவர் உடல்நிலை குறித்து பரவியிருந்த கன்னாபின்னா வதந்திகள்.

இதனாலேயே ‘கோச்சடையான்’ படத்தைப் பற்றி தினமும் அடிக்கப்படும் கும்மிகளைப் பார்த்து’ கோச்சடையான்’ன்னு ஒரு படமே கிடையாது என்று நான் கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.

இன்று காலை 9.50 டு10.20 முகூர்த்த நேரத்தில் திரையுலகினருக்கும், குறிப்பாக எங்களைப்போன்ற பத்திரிகையாளர்களுக்கும் நெருங்கிய நண்பரான FOURFRAMES' கல்யாணம் அவர்களின் புதல்வன் சதீஷுக்கும்,செல்வி அஞ்சலிக்கும்   திருமணம் சென்னை ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கோடம்பாக்கம் மொத்தமும் ரிஷப்ஷனுக்கு குவியும் என்பதால், ரஜினி விவரமாக,காலையிலேயே வந்துவிட்டார்.

அவர் காரிலிருந்து இறங்கி, கைகுழுக்கச் சென்ற அனைவருக்கும் கும்பிடு போட்டபடி , சிங்கநடை போட்டு லிஃப்டில் ஏறியதை வேகத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்த போது, இன்னும் ஒரு படம் என்ன? ஒரு டஜன் படங்களிலே கூட நடிக்கலாம் என்று தோன்றியது.

சரி, இது கல்யாணம் சார் வீட்டுக் கல்யாணம். நமக்கு  இன்றைய சிறப்பு விருந்து அவர்தான்.

படத்தில் நம்ம கல்யாணம் சார்கிட்ட அல்வா வாங்கி சாப்பிடுறாரே அந்த
விவேக்  ஒரே காமெடியை சில நேரம் பல படங்களில் பயன்படுத்துவார்.
அதில் ஒன்றுதான் ... டி.ஐ.ஜி.யை எனக்குத்தெரியும். பட், ஆனா அவருக்கு என்னைத்தெரியாது....காமெடி

ஆனால் கல்யாணம் சார் விவகாரமே வேறு. சி.எம்.மை அவருக்குத்தெரியும். அதே சமயம், சி.எம். முக்கும் கல்யாணம் சாரை,என்னய்யா கல்யாணம்’ என்று பெயர் சொல்லிக்கூப்பிடுகிற அளவுக்கு நெருக்கமாகத் தெரியும்.

இவர் அவ்வளவு பெரிய’ ஆள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் ரொம்ப பெரிய ஆள்தான். குழம்ப ஒன்றுமில்லை.பதவி என்று பார்க்கிற போது, இயக்குனர் பிரியதர்ஷனுக்கு சொந்தமான ஃபோர் ஃப்ரேம்ஸ் என்கிற தியேட்டர் நிர்வாகி அவ்வளவுதான்.

ஆனால் இந்தப்பதவியை வைத்துக்கொண்டு, மொத்த இண்டஸ்ட்ரியையும் வசியப்படுத்தமுடிந்ததென்றால், அது கல்யாணம் சாரின் ஸ்ட்ரிக்டான.கடுமையான, பரிவுகலந்த, பாசம் கலந்த உபசரணை தான்
காரணம்.

கருணாநிதி இன்றைக்கு படம் பார்க்க வருகிறாரென்றால்,அவரோடு எத்தனை பேர் வருவார்கள், என்ன சாப்பிடுவார்கள்,எந்த ஹோட்டல் காபி கருணாநிதிக்குப் பிடிக்கும்.அத்தனையும் கல்யாணம் சாருக்கு அத்துபடி.

இளையராஜா  படம் பார்க்க வந்துகொண்டிருந்தால், அவர் வந்து சேருவதற்கு முன்பே மணக்க மணக்க தாளித்த பாசிப்பயறு வந்து சேர்ந்திருக்கும்.

தியேட்டரில் வைத்து குஷ்பு தனது குழந்தையின் பிறந்த நாளைக்கொண்டாடினால், வரும் குழந்தைகளுக்கான ஐஸ்க்ரீம் செலவை அண்ணன் ஏற்பார்.

படம் ஓடிக்கொண்டிருக்கும்போது,திடீரென ஏதாவது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால், பத்து வல்லுனர்களுக்கு போன் அடித்து வரவைத்து,பத்தாயிரம் ரூபாய் பில் வரக்கூடிய ஷோ ஒழுங்காக நடப்பதற்காக ,ஒரு லட்சம் செலவழிக்கவும் தயங்காதவர். இதுதான் கல்யாணம் சார் அனைவராலும் கவரப்பட்ட ரகசியம்.

பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிட நாலைந்து தியேட்டர்கள் இருக்கிறதென்றாலும் , ஃபோர்ஃப்ரேம்ஸில்  படம் என்றாலே எங்களுக்கு கூடுதல் உற்சாகம் தொற்றிகொள்ளும்.

காரணம் கல்யாணம் சாரை சந்திக்கக்கிடைக்கிற வாய்ப்பு. பட்டாசு வெடிப்பது போல எப்போதும் உற்சாகமாக எதையாவது பேசிக்கொண்டிருப்பார்.சென்னையில் தி பெஸ்ட் செக்ஸ் ஜோக்ஸ் வங்கியும் அவர்தான்.[ஆனா இப்ப கொஞ்ச நாளா சுத்த சைவமாயிட்டாரு]

தனது மகனின் திருமணபத்திரிகையை ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் ஒரே இடத்தில் தந்து விடலாமே என்று எங்களை இரு தினங்களுக்கு முன்பு அவரது தியேட்டரில் சந்தித்து  அழைப்பிதழ் கொடுத்தார்.
 5 நிமிடங்களில் முடிந்திருக்கவேண்டிய இந்த சந்திப்பு ,யாரும் எதிர்பாராமல் சுமார் 100 நிமிடங்கள் நீடித்தது.

‘என் பையனின் திருமண அழைப்பிதழை நியாயமாக உங்கள் வீட்டில் வந்துதான் தந்திருக்கவேண்டும். என் தியேட்டரும் உங்க வீடு மாதிரியேதான் என்று நினைத்ததால் இங்கேயே அழைத்தேன்’ என்று ஆரம்பித்தவரை மெல்ல சில கேள்விகளால் சுண்டி இழுத்தோம்.

‘தலைவரே உங்க பையனை எம்.பி.ஏ.வரைக்கும் படிக்க வச்சிருக்கீங்க. உங்க படிப்பைப்பத்தி சொல்லுங்க?

உண்மையைச்சொல்லனும்னா நான் ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் தான் படிச்சேன்.

ஒன்பது பாஸா பெயிலா?

ஏன், நான் எட்டு பாஸு நீங்கஒன்பதாங்கிளாஸ் ஃபெயிலுன்னு என்ன ஓட்டுறதுக்கா? நோ கமெண்ட்ஸ்
.
தலைவரே எல்லா நடிகர்களும் உங்களுக்கு ரொம்ப நெருக்கம்கிறது எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நெருக்கமான நடிகைகளைப்பத்தி சொல்லுங்க?

சம்பந்தப்பட்டவங்க கிட்ட கேட்டுட்டு அப்புறமா சொல்றேன்
.
முந்தியெல்லாம் கவர்ச்சி நடிகைகளும், பச்சப்புள்ளங்களும் பாத்து  பயப்படுற மாதிரி ஒரு முரட்டு மீசை வச்சிருந்தீங்களே, அத ஏன் எடுத்துட்டீங்க?

எனக்கு பேத்தி பிறந்த அன்னைக்கி எடுத்துட்டேன்.

தலைவரே, நீங்க கண்டிப்பானவரா? கனிவானவரா?


ரெண்டும் கலந்த கலவை நான்.

ரஜினிக்குப் பத்திரிக்கை வச்சிட்டீங்களா?


நானும் என் மனைவியும் தான் வச்சிட்டு வந்தோம். முதல் ஆளா வந்து நிப்பேன்னு சொன்னவர், எங்களை அத்தோட விடலை. என் மனைவியைப் பார்த்து,’’ இவர் ரொம்ப பயங்கரமான ஆளு ஆச்சே ,இவர் கூட எப்பிடி குடும்பம் நடத்துறீங்கன்னு தெரியலையே’’ன்னு கலாய்ச்சார்.என் மனைவி அமைதியா சிரிக்கவே, ரஜினி என்னை அப்பவும் விடலை,’ரொம்ம்ப்ப கஷ்டமா இருக்குமேன்னுட்டு ரஜினி பிராண்ட் சிரிப்பு ஒண்ணு சிரிச்சார்.

‘இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் எவ்வளவு உரிமையோட நம்மகிட்ட பேசுறார் என்ற மன நிறைவோடு நானும் என் மனைவியும் வீடு திரும்பினோம்’

கல்யாணம் சாரின் நெகிழ்ச்சியான மனநிலையை கலைக்கவிரும்பாமல் ப்ரஸ்மீட்டைக்கலைத்தோம்.


Tuesday, January 24, 2012

'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் அண்ணனே என் அண்ணனே'- நக்கீரனில் என் கதை-8

திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்க மலரில் நக்கீரனில் நான் ஆபீஸ் பாயாக வேலை பார்த்ததாக  எழுதியிருந்ததைக் கண்டு கோபால் ஆச்சர்யப்பட்டதில், பதிலுக்கு நாமும் ஆச்சரியப்பட்டுக்கொள்வதைத்தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. ஏனெனில் நான் மக்கள் தொடர்பாளராக வேலை பார்த்தது ஒரே ஒரு   படம். பாலா இயக்கியபிதாமகன்தான் அந்தப்படம். டாக்டராக, எஞ்சினீயராக ஆகியிருக்க வேண்டிய ஒரு சிலர் எதிர்பாராத விபத்தால் நடிகர், நடிகை ஆனமாதிரி ஒரு படத்தில் அதுவும் ஒரேஒரு படத்தில் நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியதும் ஒரு விபத்தே. அப்படி 'பிதாமகனில்' மக்கள் தொடர்பாளராக பணியாற்றாமல் போயிருந்தால், இன்று பவர் ஸ்டார் சீனிவாசன், பாபுலர் ஸ்டார் டி.ராஜேந்தர் மாதிரி நானும் பெரிய நடிகர் ஆயிருப்பேன். 

அந்த வாய்ப்பில் மண் அள்ளிப்போட்டவர் என் அமெரிக்கன் கல்லூரி ஜுனியர் மாணவரான இயக்குனர் பாலா. அந்தக்கதைக்கு அப்புறம் போவோம். முதலில்  கோபால் அண்ணன் கதைக்கு வருவோம்.

கோபாலை சந்தித்த மறுதினம் கோபால் என்னைப்பற்றி அடித்த கமெண்ட்களை சொன்ன நண்பர், எனக்கே நீங்கள் ஏன் அவ்வாறு எழுதினீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.இணை ஆசிரியராக இருந்துவிட்டு உங்களை நீங்களே மட்டம் தட்டிக்கொண்டு ஆபிஸ் பாயாக வேலை பார்த்ததாக எழுதியது ஏன் என்று கேட்டார்.

பதிலுக்கு அவரிடம் நக்கீரனில் வரும்சேலஞ்ச்தொடரை என்றாவது படித்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். [சேலஞ்ச்தொடரானது நக்கீரன்என்னத்தை சாதித்தது என்பது மாதிரியான கோபால் மற்றும் காமராஜின் தம்பட்டங்கள் மட்டும்]

 நான் வேலை செய்யும் படம் தொடர்பான செய்திகள் வந்தால் அதை மட்டும் படித்துவிட்டு செய்தியை சம்பந்தப்பட்டஇயக்குனர்களிடமோ, நடிகர்களிடமோ  சேர்த்து விடுவேன். அதைத்தாண்டிசேல்ஞ்ச்படிக்கிற தில்லெல்லாம் எனக்கு கிடையாது ‘’என்றார்.

நக்கீரனில் நான் வேலைக்கு சேர்ந்த தினத்திலிருந்து வேலையை விட்டு நின்ற கடைசி நாள் வரை என் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் எவ்வளவு என்பது ஒரு சிறிய கூட்டத்துக்குத்தானே தெரியும். அவர்களும் கண்டுகொள்ளவா போகிறார்கள் என்று நினைத்து சினிமாவில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு கொடுத்த இடத்தைகூட எனக்கும் ஆசிரியர் துரைக்கும்  அந்தத்தொடரில் அவர்கள் கொடுக்காத போது நான் ஏன் ஆபிஸ் பாயாகத்தான் வேலை பார்த்தேன் என்று ஒரு இடத்தில் பதிவு செய்து மேலும் கோபாலை சந்தோஷப்படுத்தக்கூடாது என்று நினைத்துதான் அவ்வாறு எழுதினேன் என்றேன். நண்பர் உங்க பஞ்சாயத்தப்பத்தி பேச நான் யார் என்பது போல் பார்த்துவிட்டு அடுத்த டாபிக்குக்கு தாவி விட்டார்.

மற்றபடி, அண்ணனாக பத்திரிகையை ஆரம்பித்தவர் ஒருதரமானமுதலாளியா மாறிவிட்டாரே? என்ற சிறு மன வருத்தத்தோடு மட்டுமே நான் நக்கீரனை விட்டு நின்றேன்.

அப்படி வேலையை விட்ட நின்ற நாளில் கூட ஒரு பகீர் நிகழ்ச்சி நடந்தது.

இப்போது பிரபலமாகிவிட்ட பர்வீன் ட்ராவல்ஸ்க்கு அப்போது ஒரேஒரு பஸ்தான் இருந்தது.சென்னை டு மதுரை டு சென்னை டிக்கட் விலை 30ரூபாய் என்று ஞாபகம்.
நக்கீரனுக்கு மிக நெருக்கமான டிராவல்ஸாக பர்வீன் விளங்கியது.
 ஆபிசில் கணக்கு எதுவும் முடிக்காமல் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இன்றுதான் நக்கீரனில் கடைசி நாள் என்று நினைத்தபடி பர்வீனில் எனது உடை மற்றும் கேமராவோடு ஏறிக்கொண்டேன்.
 எடிட்டர் துரையிடம் மட்டுமாவது சொல்லியிருக்கலாமோ?  அவர் நம் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளை, பஸ் தேனாம்பேட்டை சிக்னல் அருகே திடீர் பிரேக் போட்டு நின்றது.
எட்டிப்பார்த்தால் நடு ரோட்டில் பஸ்ஸை மறித்தபடி நக்கீரன் ஆட்டோ.................................. [பயணம் தொடரும்]