Monday, November 21, 2011

வித்தகன்_ விமரிசனம்

காலகாலமாக பார்த்து சலித்துப்போன கள்ளன்_போலீஸ் கதை.இதில் முதல் பாதியில் போலீஸாகவும் இரண்டாவது பாதியில் ரவுடியாகவும் பார்திபனே வருவது என்பது தயாரிப்பாளருக்கு கதையாகச்சொல்லப்பட்டபோது சுவாரசியமாக இருந்திருக்கக்கூடும்.அதன்படி செவெந்த் சானல் நாராயணன் தயாரிப்பில் வெளிவந்துள்ள வித்தகன் படம் முழுக்க ஆயிரக்கணக்கில் gun. சரி முதலில் கதைக்கு வருவோம்.வழக்கம்போல் இந்தப்படத்திலும் பார்த்திபன் ஒரு அனாதை,ஆனால் அனாதை இல்லை.குழம்ப வேண்டாம் கதையே அதுதான்.அதாவது அனாதை என்று பொய் சொல்லி போலீஸ் வேலைக்கு சேரும் nonஅனாதை.சொந்த பந்தங்களைக்காட்டி மிரட்டியே போலீஸ்காரர்களை அரசியல்வாதிக்ளும் ரவுடிகளும் இப்படி ‘அனாதையாக வேலைக்கு சேர்ந்து டிபார்ட்மெண்டில் புரட்சி செய்வது என்பது ரவுத்திரானாக வரும் பார்த்திபனின் ஐடியா.விடுவார்களா வில்லன்கள்? வாங்கின சம்பளத்துக்கும் மேலாக அவர்களது அட்டகாசம் தொடர gunஐ எடுத்து படம் முழுக்க சுட்டுக்கொண்டே இருக்கிறார்.(ரவுடிகளை சுட்ட எண்ணிக்கையில் தோசையை சுட்டிருந்தால் அதை விற்று இந்தப்படத்தின் nsc ஏரியாவை வாங்கியிருக்கலாம்) முதல் பாதியில் போலீஸ் கெட் அப்பில் சற்று கிராபிக்ஸ் தோற்றத்தில் இரண்டாவது பாதியில் அச்சு அசல் பார்த்திபனாகவே வருகிறார்.ஜோடி பூர்ணா,ஊத்துக்குளி ஃப்ரெஸ் வெண்ணையில் பிடித்து வைத்தது போல் இருக்கிறார்.முறையே5வது 12வது 19வது 27வது 46 வது 59வது சீன்களிலும் இரண்டு பாடல் காட்சிகளிலும் வந்துவிட்டுபோகிறார். எம்.எஸ்.பிரபுவும், ராம்நாத்ஷெட்டியும் கலந்துகட்டி ஒளீப்பதிவு செய்திருக்கிறார்கள். இசை சந்தேகமில்லமல் இம்சைதான். ரவுத்திரனோட பழகுன்னு பாரதியார் அப்பவே சொல்லியிருக்கார் .......இப்பிடி நடக்கும்னு உனக்கு எப்பிடியா தெரியும் ...என்று வில்லன் கேட்டதும்....தெரியும் ஏன்னா இந்தப்படத்துக்கு கதை ,திரைக்கதை ,வசனம் ,டைரக்‌ஷன் எல்லாமே நாந்தானே ...பார்த்திபன் கலாய்ப்பதும் என்று ஆங்காங்கே சுவாரஸ்யம் இருந்தாலும் கொட்டாவியின் நீளம் மட்டுமே 10 ரீல் இருக்கும்போது என்னத்தைச்சொல்றது? வித்தகன் சந்தேகமில்லாமல் செத்தgunதான்.

No comments:

Post a Comment